திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்கள் சார்பாக நீதிமன்றங்களில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு எனத் தனியான விசேட பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு.வூட்லர் தெரிவித்தார்.
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சட்டத்தரணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் இத்தகவலை அவர் வெளியிட்டார்.
சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கு அப்பால், குறிப்பிட்ட ஒரு தரப்பு சட்டத்தரணிகளுக்கு என விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது. வாடிக்கையாளர்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுவது சட்டத்தரணிகளின் தொழில்சார் கடமையாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், மேலதிக பாதுகாப்பு கோரிக்கைகளை நிராகரித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


















