நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணக்கார கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், உயர் நீதிமன்ற நீதியரசர் துரைராஜா தலைமையில் குழு ஒன்றை நியமனம் செய்துள்ளோம். இனம் மற்றும் அரசியல் கைதி என பாராமல், ஒரு பொதுவான முறைமையின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராயப்படுகிறது.
நாங்கள் தூக்கு தண்டணை வழங்குவதில்லையே, ஆக, 18 அல்லது 19 வயதில் தவறு செய்த ஒருவரை 60 வயதுவரை சிறையில் வைத்திருப்பதில் நியாயம் இல்லை. புனர்வாழ்வின் ஊடாக அனைவரும் மாற்றமடைவார்கள்.
ஆக, இந்த விடயத்தை ஆராயும் குழுவின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக சிறையில் உள்ளவர்களை வெளியில் அனுப்புவோம் என்றார்.


















