நாட்டில் உள்ள கடுமையான சிறைச்சாலை நெரிசலை நிவர்த்தி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளை மின்னணு கண்காணிப்பு மூலம் வீட்டுக் காவலில் வைக்க உதவும் புதிய சட்டம் வரைவு செய்யப்பட்டு வருவதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், 10,000 பேரை மட்டுமே அடைக்கக்கூடிய சிறைச்சாலைகளில் தற்போது 39,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
பெரும்பாலான கைதிகள் தடுப்புக் கைதிகள் என்றும், அவர்களில் பலர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இது நீதி அமைப்பில் தாமதத்திற்கு கணிசமாக பங்களிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
















