பத்தரமுல்ல – அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பத்தேகமவைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


















