கொழும்பு – ஹட்டன் வீதியில் வட்டவளை சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து தங்கொட்டுவ நோக்கி அதிவேகமாகப் பயணித்த லொறி ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து புரண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
எதிரே வந்த மற்றொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க முயன்ற போதே, தனது லொறி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்தது என்று விபத்துக்குள்ளான லொறியின் சாரதி தெரிவித்துள்ளார். லொறியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சாரதியை வட்டவளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்டுள்ளனர்.
படுகாயமடைந்த சாரதியும் உதவியாளரும் முதலில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















