-ஒப்புக்கொண்ட அமைச்சர் லால் காந்தா-
தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட வேளாண் அமைச்சர் லால் காந்தா, நிலக்கரி விநியோக டெண்டருக்குப் பின்னால் எந்த மோசடியோ ஊழலோ இல்லை என்று நேற்று தெரிவித்தார்.
தரமற்ற நிலக்கரி விநியோகத்தால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஒரு வழிமுறை மற்றும் அளவுகோல் இருப்பதாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுப்பதற்கான அளவுகோல்களின்படி அரசாங்கம் செயல்படும் என்றார்.
தரம் குறைந்த நிலக்கரி வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உண்மைதான். ஆனால், நிலக்கரி டெண்டருக்குப் பின்னால் எந்த மோசடியோ ஊழலோ இல்லை. குற்றச்சாட்டுகள் வெறும் கூற்றுக்கள் மட்டுமே என்று அவர் கூறினார்.
முந்தைய ஆட்சிகளின் போது அமைச்சரவை முடிவுகளுக்குப் பின்குதான் சப்ளையர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது டெண்டர்களை வழங்கும்போது அரசாங்கம் வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக அமைச்சர் கூறினார்.


















