அநுராதபுரம் – இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய நேற்று புதன்கிழமை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பெக்கோ இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25,35,47,49 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும், கல்னேவ நேகம்பஹா, அலுவிஹாரேகம சேனபுர, தம்புத்தேகம மற்றும் மரதன்கடவல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
சந்தேகநபர்களை நேற்று மாலை கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.















