சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (2) மாலை மழைநீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு, அன்றாடக் காரியங்களை மேற்கொள்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வரத்து வழிகளை உடனடியாகச் சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்குப் பிரதேச சபையும் உரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















