-ரவிகரன் எதிர்த்ததால் தமிழில் மொழிபெயர்ப்பு-
-வி.சரவணன்-
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தனியே சிங்கள மொழியில் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அதனை எதிர்த்ததால் உடனடியாக தமிழில் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது நீண்டநேரமாக தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் தனிச் சிங்களத்தில் கூட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில், ரவிகரன் சபை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பவர்கள், பொதுமக்கள் என பெரும்பான்மையானவர்கள். அவ்வாறிருக்க மொழிபெயர்ப்பு இன்றி அனைவரும் சிங்கள மொழியில் பேசிக் கொண்டிருப்பது, முறையற்றது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என சுட்டிக்காட்டினார். இதனையடுத்து சிங்கள மொழிபேசும் சந்தர்ப்பங்களில் தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது.


















