-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்-
-வி.சரவணன்-
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் நலன்புரிச் சங்கத்தினர், பிரதேசசபை உறுப்பினர்களான இ.கிரிதரன், பொ.தேவராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
அத்தோடு வைத்தியசாலையின் முக்கியமான பௌதீகவள குறைபாடொன்றை சீர்செய்வது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை தம்மிடம் கைளிக்குமாறு வைத்தியரிடம் கேட்டுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இம்முறை தமக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து வைத்தியசாலையின் குறைபாடொன்றை தீர்த்து வைப்பது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.


















