-ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது
-அத்தியாவசிய சேவைகளை பாதுகாக்க சட்டம் நீடிக்கப்பட்டதாக தெரிவிப்பு
நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொது அவசரகால சூழ்நிலையை மேற்கோள் காட்டி, பொது பாதுகாப்பை உறுதி செய்தல், பொது ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















