-பிரதமரிடம் ரவிகரன் எம்.பி. கோரிக்கை-
-வி.சரவணன்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூலமான கேள்வி-பதில் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தினைப் பயன்படுத்துகின்ற பாடசாலை இருக்குமானால் இது தொடர்பான விபரங்களை தமக்கு வழங்குமாறு கோரியிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு வகுப்பறைகள் இல்லாதநிலையில், முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருகின்றனர்.
எனவே விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய கட்டடங்கள் விரைவாக முன்னுரிமை அடிப்படையில் முழுமைப்படுத்தப்பட வேண்டும் பிரதமரிடம் நாடாறுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


















