-சாரதி கைதானார்-
வன்னி பகுதியில் இருந்து தேக்கமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றினர்.
புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்து சென்று மீசாலை பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் மரக்குற்றிகளை இறக்கத் தயாரான போது கைப்பற்றியதுடன் சாரதியை கைது செய்தனர்.
20 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான 52 தேக்கமரக்குற்றிகளுடன் குறித்த பாரவூர்தியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த பாரவூர்தி நீண்ட நாட்களாக சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.


















