பத்தேகமவில் உள்ள புனித அந்தோனியார் கல்லூரியில் நேற்றுக் காலை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மூன்று மாணவர்கள் கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மற்ற இரண்டு மாணவர்கள் பத்தேகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்று பொலிஸார் கூறினர்.
ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















