2026ம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான முடிவை இம்மாத இறுதிக்குள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு 13.56வீதம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி கோரி, இலங்கை மின்சாரசபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தது. இது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் 3ஆம் நாளாக இன்று மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கோரப்படுகின்றன.


















