முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் ஒன்று பற்றைக்காடாக காணப்படுகின்றது இதனை பிரதேசசபை இதுவரை கண்டுகொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு – வெள்ளப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள சுடலையே இவ்வாறு காணப்படுகின்றது.
மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக காணப்படும் சுடலைகளை சுத்தம் செய்வது புனரமைப்பு செய்வது சீர்செய்வது போன்ற நடவடிக்கைகள் பிரதேசசபையின் கீழே காணப்படுகின்றது.
இந்நிலையில் வெள்ளப்பள்ளம் சுடலையில் இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாத நிலையில் எரிகொட்டகை அமைத்துக்கொடுக்கப்ட்டாலும் அருகில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள நிலைய சுத்தம் இல்லாத நிலை காணப்படுகின்றது
உடையார்கட்டுவடக்கு,சுதந்திரபுரம்,வெள்ளப்பள்ளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சுடலையினையே பயன்படுத்தி வருகின்றார்கள் தேர்தல் வாக்குக்கேக்கும் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து வட்டாரங்களில் இருந்து தெரிவான
பிரதேசசபை உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.


















