-பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்-
35,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.அராஜகருணா தெரிவித்தார்.
இந்தக் கப்பலைத் தவிர, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து மேலும் மூன்று எரிபொருள் கப்பல்கள் இந்த மாதம் நாட்டிற்கு வர உள்ளன.
இதனால் ஏப்ரல் மாத இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ள அதேவேளை எரிபொருள் இருப்புக்கள் இறக்கப்படும் நேரத்தில் நிலவும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப விலைகள் தீர்மானிக்கப்படும் என்றும் தலைவர் டி.ஏ. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.


















