-கஜிந்தன்-
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து 2 கிராம், 600 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















