இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிர தேசங்களில் தற்போது நிலவுகின்ற வரட்சியினால் தேயிலை விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட தொழில் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
எஹலியகொடை,இரத்தினபுரி,குருவிட்ட மற்றும் கிரியெல்ல போன்ற பிரதேச ங்களில் வரட்சி நிலைமை பாரதூரமாக காணப்படுவதாகவும் தமது விளைச்சல் அரைவாசிக்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டில் மூன்று முறை கொழுந்து அறுவடை செய்த போதிலும் தற்போது வருடத்தில் ஒரு முறையே அறுவடை செய்ய முடியுமாக உள்ளதாகவும் அத்தரப்பினர் தெரிவித்தனர்.
வரட்சியால் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பால் எதிர்காலத்தில் மழை பெய்தாலும் கடந்த காலவிளைச்சலை எதிர்பார்க்க முடியாது எனவும் அப்பகுதி சிறு தேயிலைத் தோட்ட தொழில்துறையினர் குறிப்பிட்டனர்.


















