நாம் சில பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை மற்றும் தேன்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகுவது, நச்சுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீரானது, செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது.
வெந்தய நீர்

ரத்த சர்க்கரை அளவைச் சமநிலையில் வைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் வெந்தய நீர் உதவுகிறது.
கிரீன் டீ

அவ்வப்போது கிரீன் டீ பருகுவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
ஊறவைத்த பாதாம் நீர்

பாதாம் பருப்பு சாப்பிடுவதும், பாதாம் ஊறவைத்த நீரை குடிப்பதும் மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆற்றலை அளிக்கும்.


















