பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
விலைக்குறைப்பு செய்யப்படும் பொருட்கள் நாடு முழுவதும் உள்ள சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஐயவர்த்தன,
பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம்.
பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி, அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


















