தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை பிரசாரத்தை தொடங்கவுள்ள நிலையில், ஒரே நாளில் 5 தொகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. முதல்முறையாக தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் த.வெ.க தனித்துப் போட்டியிடும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தவெக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், நாளை முதல் விஜய் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், விரைவில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
த.வெ.க தரப்பில் சென்னையில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 5 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















