யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தை
யாழ் மாநகரசபை பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டும் என யாழ் மாநகரசபையின் இன்றை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு யாழ் மாநகரசபையின் மாதந்த அமர்வு யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா தலமையில் ஆரம்பமானபோது.
2014ம் ஆண்டு யூன் மாதம் 09ம் திகதி கைசாத்திடப்பட்ட இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக பூர்த்தி செய்யப்பட்ட திருவள்ளுவர் கலாசார மையத்தை யாழ்ப்பாணம் மாநகரசபையிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் எனவும்.
நம்பிக்கை பொறுப்பு என்ற எவ் வித விடத்திலும் யாழ் மாநகரசபை உடன்படவில்லை என்பதனையும் வலியுறுத்தி இலங்கை புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சு மற்றும் இலங்கை;கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கும் இக்கோரிக்கை தீர்மானம் அனுப்ப வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
















