நீர்கொழும்பு களப்பு பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு பகுதியில் கடற்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலில் மிதந்து கொண்டிருந்த ஒன்பது பொதிகளை கடற்படையினர் பரிசோதிக்குட்படுத்தினர். குறித்த பொதிகளை கரைக்கு கொண்டு வர முடியாததால் கடத்தல்காரர்கள் அவற்றை கடலில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
















