“நாம் எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை.. எனினும் இதோடு எல்லாம் முடிந்தும் விடவில்லை. நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம்.” என காங்கோ அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து ரொனால்டோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹூஸ்டனில் நேற்றிரவு கே’ பிரிவு லீக் ஆட்டத்தில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் காங்கோ போட்டியின் பின்னர் ரொனால்டோ மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
போர்ச்சுகல் அணியின் ஜோவா நோவஷ் ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காங்கோ அணியின் யோனே வைஸா 45ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார் .இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதியில் இரு அணிகளும் போராடியும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-1 என இந்த ஆட்டம் ட்ராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

















