வெல்லம்பிட்டிய பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (24) காலை சுமார் 5.30 மணியளவில், கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் திடீர் மாரடைப்பு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து வெல்லம்பிட்டிய அம்பாகஹா சந்திப்பில் விபத்துக்குள்ளானதுடன், வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.
ஓட்டுநர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்து விட்டதாக வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















