முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது, அவர் வசம் இருந்த புலனாய்வுத் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று முட்டாள் அரசியல்வாதிகள் கூறி வருவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தகவல் வழங்குபவர்கள் அனைவருக்கும் தகவல்களை வழங்குவதில்லை என்றும், தங்களுக்கு நம்பிக்கையானவர்களுக்கு மட்டுமே தகவல்களை வழங்குவார்கள் என்றும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார். மில்லேனியம் சிட்டி துரோகத்தின் போது, இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவல் வழங்குபவர்களின் விபரங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டதால் 73 பேர் உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, சுரேஷ் சலே தனது தகவல்களை உயிரைப் பணையம் வைத்துப் பாதுகாப்பார் என்று மேலும் தெரிவித்தார்.

















