களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர், இலஞ்சம் கோரிய மற்றும் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
யக்கலவில் வசிக்கும் ஒரு வியாபாரி அளித்த முறைப்பாட்டின் படி, மாற்றப்பட்ட எஞ்சின் மற்றும் சேசி இலக்கம் கொண்ட ஒரு வேன் தொடர்பாக களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையின் போது, தொடர்புடைய முறைப்பாட்டாளரிடம் ரூபா 20 இலட்சம் இலஞ்சமாகக் கோரியதாகவும், ரூபா 1 இலட்சம் முன்பணமாகப் பெற்றதாகவும், பின்னர் அந்த இலஞ்சத் தொகையை ரூபா 15 இலட்சமாகக் குறைத்து, மீண்டும் ரூபா 10 இலட்சமாகக் குறைத்து, பின்னர் குறைக்கப்பட்ட அந்த ரூபா 10 இலட்சத்தையே இலஞ்சமாகக் கோரியதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது களுத்துறையில் உள்ள பனோரமா ஹோட்டலில் வைத்து 22.06.2026 அன்று இரவு 8.30 மணிக்கு மேற்கண்ட ரூபா 10 இலட்சத்தை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கலவில பத்திரிகே உதய குமார என்பவர் இலஞ்சம் , ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 03.07.2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

















