பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் சில மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அது இந்த ஆண்டுக்குள் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த ஒரு வலுவான சட்டம் இயற்றப்படும் என்றும் என குறிப்பிட்டார்.
நீதிமன்றங்கள் செயலிழக்காத வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றங்களில் உள்ள வெற்றிட இடங்களை குறுகிய காலத்தில் நிரப்ப முடியும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நமது நாடு ஒரு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது. எமது இராணுவம், புலனாய்வுப் பிரிவினர் மீதான கௌரவம், பாராட்டு மற்றும் விசுவாசம் எமக்கு உள்ளது. ஆனால், எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்போது, அவர்கள் எங்கேனும் அநீதிக்குள்ளானால் நாம் அவர்களுக்காக முன்னிற்போம். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டிருந்தால், அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தப் பணியை நாம் செய்வோம்.”
“ஆனால், இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குரிய தண்டனையை வழங்க எமது அரசாங்கம் தயங்காது.”
குற்றவாளிகள் முறையாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். காலத்தின் மணல் துகள்களால் இவை மூடிப்போகும் என்று சிலர் நினைத்தார்கள். அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோ என ஜனாதிபதி கூறினார்.

















