
இவ்வாறு இன்று நாடாளுமன்றத்தில் தம்மைச் சந்தித்து உரையாடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராச மாணிக்கம் சாணக்கியனிடம் உறுதி யளித்தார் இலங்கையின் நீதி அமைச்சர் லூர்\ன நாணயக்கார. செம்மணி விடயம் குறித்து இருவரும் இன்று விரிவாகக் கலந்துரையாடினர். செம்மணி மனிதப் புதைகுழி விடயத் தில் புதைகுழியில் இருந்து எலும்புக் கூடுகளை மீட்கும் நடவடிக்கை தொடரும் அதே சமயத்தில், மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளுக்கு உரியவர்களை அடையாளம் காண்பதற்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் நாணயக்கார குறிப்பிட்டார்.
















