உலகக் கிண்ண கால்பந்து 2ஆவது சுற்று ஆட்டத்தில் மெக்சிகோ அணி, ஈகுவடாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று காலை 7.30 மணிக்கு மெக்சிகோ சிட்டியில் அரங்கேறிய 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ அணி ஈகுவடாரை எதிர்கொண்டது. ஆட்டம் துவங்கியதிலிருந்தே இரு அணி வீரகளும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கோலுக்காக கடுமையான போராட்டம் நடந்தது. அப்போது ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் குயினோன்ஸ் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.
தொடர்ந்து 31ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ரவுல் ஜிமினெஸ் கோல் அடிக்க முன்னிலை மேலும் உயர்ந்தது. இதனையடுத்து முதல் கோலூக்காக ஈகுவடார் கடுமையாக போராடியது. இருப்பினும் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் மெக்சிகோ 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் மீண்டும் ஆட்டத்திற்குள் வர ஈகுவடார் அணியும், முதல் பாதியில் இரு கோல்களை அடித்து ஆட்டத்தின் கட்டுப்பாட்டை தனது வசம் வைத்திருந்த மெக்சிகோ அணியும் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின.
இருப்பினும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. அப்போது ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் காதில் கையை மறைத்து பேசியதற்காக ஈகுவடார் வீரர் பியரோ ஹின்காபிக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி 3ஆவது சுற்று ஆட்டத்திற்கு முன்னேறியது.

















