கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ‘சிவசக்தி’ எனும் இடத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
லேண்டரிலிருந்து பிரிந்து ஆய்வு மேற்கொண்ட பிரக்யான் ரோவர் அனுப்பிய தரவுகளின்படி, ‘சிவசக்தி’ பகுதியில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, இந்த அதிர்வுகள் பெரும்பாலும் சிறிய அளவிலானவை என்றாலும், அவற்றில் சில அதிர்வுகள் பல மணி நேரம் வரை நீடித்துள்ளன.
நிலவின் மேற்பரப்பு வெப்பத்தைக் கடத்தாமல், 10 செ.மீ. ஆழம் வரை ஒரு வெப்பக் கவசமாக செயல்படுகின்றது.
நிலவின் ஆழமான மண் பகுதியில் மெக்னீசியம் தாதுக்கள் அதிக அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், நிலவு உருவான தொடக்கக் காலத்தில் மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாக செயல்பட்டிருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நிலவில் ஏற்படும் இந்தத் திடீர் நில அதிர்வுகள் குறித்து இஸ்ரோ தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றது.


















