யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் , வீட்டார் சென்று பார்த்த போது மலசல கூடத்திற்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து , அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , மரண விசாரணையின் போது குறித்த இளைஞன் சில காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது.


















