அமெரிக்காவில் எலான் மஸ்கின் ‘X’ நிறுவனம் தனது புதிய டிஜிட்டல் வங்கிச் சேவையான ‘X Money’யை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சேவையின் மூலம், பயனர்கள் ‘X’ செயலியிலேயே நேரடியாக பணம் அனுப்பவும், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பில்களைச் செலுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகத் தளமாக மட்டுமல்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் “Everything App” ஆக ‘X’ செயலியை மாற்றும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


















