யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க, இன்று (30) காலை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரும் அமைச்சருடன் இணைந்து ஆலயத்திற்குச் சென்றிருந்தனர்.























