யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களின் ரோபோட்டிக் புத்தாக்கக் கண்காட்சி கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை A.P. திருமகன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு புத்தாக்கப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன், தற்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் தொழில்நுட்பப் பாட ஆலோசகர் திருமதி வனிதா கதிர்காமநாதன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், அயற்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவர்களின் புத்தாக்கப் படைப்புகளைப் பார்வையிட்டனர்.

























