வடக்கு கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இந்திய துணைத் தூதரகம் – யாழ்ப்பாணத்தின் ஆதரவுடன் மூன்று நாட்கள் நடைபெறும் Northern International Trade Exhibition 2026 கண்காட்சியை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி பார்வையிட்டுள்ளார்.
கண்காட்சியில் விவசாயம், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), கைவினைப் பொருட்கள், சிறுதானியங்கள், பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இளைஞர் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களின் உள்ளூர் திறமைகள், தயாரிப்புகள் மற்றும் புத்தாக்க முயற்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய தளமாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.
மேலும், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் புதிய கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






















