கொழும்பு துறைமுக நகரத்தில் சீனக் குழுவொன்றினால் மூன்று சீனக் குடிமக்கள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2026.07.23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குற்றச்செயல் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்படி குற்றச்செயலுக்குத் தேவையான சந்தேகநபர் ஒருவர் நேற்று (04) கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய சீனக் குடிமகனாவார்.


















