மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான நிலக்கரியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக பரவிவரும் செய்திகள் உண்மையற்றவை என நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.


















