முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவும் முன்னதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















