• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, October 8, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் உள்ளூர் செய்திகள்

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – கபிலன்

Yarl Thinakkural by Yarl Thinakkural
October 7, 2026
in உள்ளூர் செய்திகள், செய்திகள்
0
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – கபிலன்
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் அவரது சிலை அமைப்பது தொடர்பான விடயங்களை அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் இன்றைய அமர்வில் இடம்பெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர், அமரர் திலீபனின் நினைவு அனுஷ்டிப்பு தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று சாடிக்கொண்டு நீண்ட விவாதத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் விவாதிப்பதில் தாம் மனவருத்தமடைவதாகத் தெரிவித்தார்.

ஒரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது கட்சியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து கேள்விகளைத் தொடுத்ததன் காரணமாகவே தாம் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற நோக்கிலேயே தாம் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதாகக் கூறினார்.

திலீபனின் நினைவேந்தல் தொடர்பான விடயங்களில் தமது கட்சி எந்தவித எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுத்திருக்கவில்லை எனவும், மாறாக தியாகத்தின் மீதான மரியாதையின் அடிப்படையில் தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

திலீபனின் படம் மாநகர சபை வளாகத்தில் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத நிலையில் வைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும், தமது கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் அங்கு சென்று மலரஞ்சலி செலுத்தியதாகக் குறிப்பிட்ட கபிலன், பின்னர் திலீபனின் சிலையை அமைப்பது தொடர்பான பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டபோதும் தமது தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

எனினும், மாநகர சபையின் நடைமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே எந்தவொரு பிரேரணையும் முன்வைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, இவ்வாறான உணர்வுபூர்வமான விடயம் தொடர்பான பிரேரணை விசேட கவனத்துடனும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியும் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஒரு சிலையை நிரந்தரமாக அமைப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்க வேண்டுமெனில், உரிய கால அவகாசத்துடன் பிரேரணையைச் சமர்ப்பித்து, அது நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்று, தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே சபையில் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தால், அது தொடர்பில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி, சட்டரீதியான விடயங்கள் தொடர்பில் மாநகர சபையின் சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று, ஒருமித்த முடிவை எடுத்திருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிலை அமைப்பது தொடர்பான நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் அது தற்காலிகமாக அமைக்கப்படுவது என்றே கலந்துரையாடப்பட்டதாகவும், அதுவே தீர்மானமாகவும் எடுக்கப்பட்டிருந்ததாகவும் கபிலன் குறிப்பிட்டார். இதற்காக சில அரசியல் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமது கட்சியுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படாத போதிலும், இந்த விடயத்தில் தாம் மரியாதையுடன் அமைதியாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தமது அரசாங்கத்தின் மீது பழிசுமத்தும் வகையில் அமைந்தமை தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

“நாங்களும் உணர்வுள்ள மனிதர்கள்தான். தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் நோக்கிலேயே நாங்கள் ஆதரவளித்தோம். எங்களிடம் எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை. அவ்வாறிருக்கையில், இன்று எங்களுடன் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, திலீபனின் நினைவு மற்றும் சிலை தொடர்பான விடயத்தில் காவல்துறையின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதைத் தவிர்த்து, ஏதேனும் சட்டவிரோதம் அல்லது அநீதி இடம்பெற்றதாகக் கருதப்பட்டால், உரிய சட்ட நடைமுறைகளை நாடுவதே பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான கடமைகளின் அடிப்படையில் செயற்படுவது போன்று, காவல்துறையும் தனது சட்டரீதியான கடமையைச் செய்திருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்தின் மீது நம்பிக்கை இருந்தால் சட்டரீதியான வழிமுறைகளையே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், திலீபனின் நினைவேந்தல் தொடர்பான விடயங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசியல் தரப்புகளுக்கு இடையே ஏற்படும் போட்டி மற்றும் கருத்து முரண்பாடுகள் குறித்து உறுப்பினர் கபிலன் கவலை தெரிவித்தார்.

தியாகத்தின் நினைவைப் போற்றும் விடயம் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போட்டியாக மாறக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், நினைவேந்தல் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களை ஊடகப் பிரசாரம் அல்லது அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

“தியாகத்தின் நினைவை ஒவ்வொரு முறையும் அரசியல் விவாதத்திற்குள் கொண்டு வந்து சிக்கலாக்குவது வேதனையளிக்கிறது. இந்த விடயம் தொடர்பில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவற்றை உரிய நடைமுறைகளின் ஊடாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும், ஊடகங்கள் இந்த விவகாரத்தை செய்தியாக வெளியிடும்போது, சம்பவத்தின் முழுமையான பின்னணியையும் அனைத்து தரப்பினரின் நிலைப்பாடுகளையும் கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி, அவர் பின்வரும் கேள்விகளையும் முன்வைத்தார்:

  1. வருடாந்த நினைவு நிகழ்விற்காக சிலையை வடிவமைத்தவர்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்காக 3 அல்லது 7 நாட்களுக்கு முன்னதாகவே பிரேரணையை மாநகர சபைக்கு ஏன் சமர்ப்பிக்கவில்லை?
  2. 15.09.2026 அன்று காலையிலேயே சிலையை வைத்த பின்னர், ஏன் மதியம் மாநகர சபையின் அனுமதிக்காக விண்ணப்பித்தீர்கள்?
  3. தற்காலிக அனுமதிக்கே விண்ணப்பித்து, அதனடிப்படையில் அனுமதியும் கிடைத்திருந்த நிலையில், நிகழ்வு முடிந்த பின்னர் 26.09.2026 மாலையில் ஏன் சிலையை அகற்றவில்லை?

“இவற்றுக்குப் பதிலளித்தால், உண்மையில் ஒரு தியாகத்தை மதிக்கும் உணர்வுள்ள ஒருவரால் இவ்வாறு செய்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இது தவறான திட்டத்தைத் தீட்டி, அதன் மூலம் ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயற்பட்டவர்களாலேயே செய்ய முடியும்” என அவர் தெரிவித்தார்.

“ஆனால் நாங்கள் மாநகர சபையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டோம். திடீரெனக் கொண்டுவரப்பட்ட பிரேரணையையும் எதிர்க்காமல் இருந்தோம். இந்நிலையில், எங்களை துரோகிகள் என முத்திரை குத்த முயல்வது மிகவும் அசிங்கமான அரசியலின் அடையாளமாகும்” எனவும் கபிலன் குறிப்பிட்டார்.

“இந்த நிலையில் சிலை அகற்றப்பட்டதும் அனைவரும் எம்மை எதிர்ப்பதில் ஒற்றுமை காட்டினீர்களே. இதே ஒற்றுமையை சிலை அமைப்பதற்கான அனுமதியைப் பெறுவதிலும் காட்டியிருக்கலாமே?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

“தியாகத்தை வருடாவருடம் கொச்சைப்படுத்தி, அதனை ஒரு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி சிதைக்கும் அரசியலை நினைத்து நாம் வெட்கப்படுகிறோம். இந்தத் தியாகம் தொடர்பான ஒரு மோதலில் நானும் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து மனம் வருந்துகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

திலீபனின் தியாகத்தை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தாமல், அவரது நினைவை மதிக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் யாழ்ப்பாண மாநகர சபையில் சுந்தரமூர்த்தி கபிலன் மேலும் தெரிவித்தார்.

Tags: Yarlthinakkural
Previous Post

ஷிரந்தியைத் தொடர்ந்து பிரதீப் காரியவசம் கைது

Next Post

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

Related Posts

இலங்கை டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
சிறப்புச் செய்திகள்

இலங்கை டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு
இலங்கை செய்திகள்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு

October 8, 2026
“ஷிரந்தி ராஜபக்‌ஷ எமதுகட்சி உறுப்பினர் அல்ல”
இலங்கை செய்திகள்

“ஷிரந்தி ராஜபக்‌ஷ எமதுகட்சி உறுப்பினர் அல்ல”

October 8, 2026
தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுதலை!
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுதலை!

October 8, 2026
கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
இலங்கை செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
Next Post
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

September 16, 2026
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இலங்கை டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

இலங்கை டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு

October 8, 2026
“ஷிரந்தி ராஜபக்‌ஷ எமதுகட்சி உறுப்பினர் அல்ல”

“ஷிரந்தி ராஜபக்‌ஷ எமதுகட்சி உறுப்பினர் அல்ல”

October 8, 2026
தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுதலை!

தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுதலை!

October 8, 2026

Recent News

இலங்கை டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

இலங்கை டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு

October 8, 2026
“ஷிரந்தி ராஜபக்‌ஷ எமதுகட்சி உறுப்பினர் அல்ல”

“ஷிரந்தி ராஜபக்‌ஷ எமதுகட்சி உறுப்பினர் அல்ல”

October 8, 2026
தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுதலை!

தேசிய மக்கள் சக்தி எம்.பி சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுதலை!

October 8, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இலங்கை டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம் October 8, 2026
  • சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் – ஆராய குழு October 8, 2026
  • “ஷிரந்தி ராஜபக்‌ஷ எமதுகட்சி உறுப்பினர் அல்ல” October 8, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.