முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், கொழும்பு இலக்கம் 11 மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


















