யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியைப் பார்வையிட்டார்.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த பிரபாகரனின் இல்லம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்பகுதி வெறும் காணியாகக் காணப்படுகிறது.
இதே பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.




















