அ.அன்பழகன்
உலகளவில் வளர்ந்து வரும் தொழினுட்பப் புரட்சியில், புவிசார் தொழினுட்பங்களின் பங்கை இந்தியா மிக வேகமாக உணர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, இடஞ்சார் பகுப்பாய்வு (Spatial Analytics) மற்றும் டிஜிட்டல் ட்வின்ஸ் (Digital Twins) ஆகிய தொழினுட்பங்களின் ஒருங்கிணைப்பானது, நாட்டின் நல்ஆளுமை, உட்கட்டமைப்பு மேம்பாடு, பொதுச்சேவைகளை வழங்குவதில் புதிய சாத்தியக்கூறுகளைத் திறந்துவிட்டுள்ளது.
இலங்கை, இந்தியா உட்பட வளரும் நாடுகள் பலவும் தங்களின் நீர் முகாமை, நில நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களில் இத்தகைய தொழினுட்பங்களைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தச் சூழலில், இந்தியாவில் ‘எஸ்ரி இந்தியா’ (Esri India) நிறுவனமானது 30ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் முகாமைத்துவ இயக்குநர் அகேந்திர குமார், நாட்டின் புவிசார் தொழினுட்பத்தின் வளர்ச்சி, கொள்கை மாற்றங்கள் மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்த முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
மூன்றுதசாப்தாலகாலதொழினுட்பப்பாய்ச்சல்
1990-களின் தொடக்கத்தில் இந்தியப் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட கால கட்டத்திலேயே புவிசார் தொழினுட்பத்தின் தேவையும் உருவெடுத்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஏவிய புவி அவதானிப்புச் செயற்கைக்கோள்கள், இயற்கை வள முகாமைத்துவம் மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கத் தொடங்கின.
1995–1996 காலப்பகுதியில் கணினித் திறன், வரைபட செயலாக்க வசதிகள் மற்றும் இணைய வேகம் ஆகியவை மிகவும் வரம்பிற்குட்பட்டதாகவே இருந்தன. அக்காலத்தில் ஒரு சாதாரண மடிக்கணினியின் திறன்கூட அற்ற அதிநவீன கணின அமைப்புகளே வரைபட உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் கடந்த 30ஆண்டுகளில், வெறும் கணினி வழி வரைபட உருவாக்கத்திலிருந்து, அதிநவீன இடஞ்சார் நுண்ணறிவுத் தொழினுட்பமாக ஜி.ஐ.எஸ் உருவெடுத்துள்ளது. தற்போது பருவநிலை மாற்றம், நகரமயமாக்கல், நகர்ப்புற வெள்ளக் கட்டுப்பாடு, உட்கட்டமைப்பு, பாதுகாப்புச் சவால்களுக்குத் தீர்வுகாண இத்தொழினுட்பம் மிக முக்கிய காரணியாக மாறியுள்ளது.
நிறுவனஅமைப்புகளில்இடஞ்சார்நுண்ணறிவின்தேவை
எதிர்காலம் குறித்துப் பேசிய அகேந்திரகுமார், ‘தற்போது பெருநிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்களில் பயன்பாட்டில் உள்ள செயற்கைநுண்ணறிவு அமைப்புகளைப் போல, இடஞ்சார் நுண்ணறிவும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தவிர்க்க முடியாத அடிப்படை உள்கட்டமைப்பாகமாற வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
தற்போது வரைபடவியல் அல்லது புவியியல் துறைகளுடன் மட்டுமே ஜி.ஐ.எஸ் தொழினுட்பம் முடக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், நிதித்துறை கடனாளிகளின் புவியியல் பரவலை அறிவதற்கும், உற்பத்தித்துறைகள் தங்கள் விநியோகச் சங்கிலி, தளவாடங்களை நிர்வகிப்பதற்கும் இத்தொழினுட்பம் பெரிதும் உதவும் என்றார்.
இச்சாத்தியமாக்க, கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். புவித் தகவலியல் மற்றும் சிவில் பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமின்றி, கணினி அறிவியல், இயந்திரவியல், பொருளாதாரம் மற்றும் முகாமைத்துவதுறை மாணவர்களுக்கும் ஜி.ஐ.எஸ் தொழினுட்பப் பயிற்சிகள் பாடத்திட்டங்களில் விருப்பப் பாடங்களாகச் சேர்க்கப்பட வேண்டும்.
கொள்கைசீர்திருத்தங்களும் நிலவும்சவால்களும்
இந்தியாவில் 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புவிசார் தரவு வழிகாட்டுதல்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டின் தேசிய புவிசார் கொள்கை ஆகியவற்றுக்குப் பிறகு, தரவுகளைச் சேகரிப்பதும் செயலாக்குவதும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. வான்வழிச் கணக்கெடுப்புகள், ட்ரோன் மூலமான தரவுச் சேகரிப்புகளுக்கான அனுமதி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், 2030 ஆம் ஆண்டிற்குள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படைப் புவிசார் தரவுத்தொகுப்புகள் மற்றும் டிஜிட்டல் ட்வின்ஸ் திட்டங்களுக்கான நிதி முதலீடுகள் இன்னும் போதிய அளவில் அதிகரிக்கப்படவில்லை என்ற கவலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அடிப்படையான இடஞ்சார் தரவுகள் துல்லியமாகவும் ஒரே மாதிரியான தரநிலையிலும் இருந்தால் மட்டுமே, அதன் மேல் கட்டமைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் ட்வின்ஸ் பயன்பாடுகள் துல்லியமான முடிவுகளை வழங்கும்.
ஜியோசெயற்கைநுண்ணறிவுமையம்
செயற்கை நுண்ணறிவு தொழினுட்பத்தை ஜி.ஐ.எஸ் அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப் பயனர்களுக்கு உதவும் வகையில், நொய்டாவில் 150 கோடி ரூபா முதலீட்டில் ‘ஜி.ஐ.எஸ்’ மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் மையத்தை (GIS and AI Competency Centre) எஸ்ரி இந்தியா நிறுவனம் அமைத்துள்ளது.
இமையத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனப் பயனர்களுக்கு ஜியோ செயற்கை நுண்ணறிவு தொழினுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறையில் மின்கோபுரங்கள் மற்றும் மின் பாதைகளைத் தானியங்கி முறையில் வரைபடமாக்குதல், காடுகள் மற்றும் விவசாய நிலங்களைக் கண்காணித்தல், சட்டவிரோதக் கட்டுமானங்களைக் கண்டறிதல் மற்றும் போக்குவரத்து விபத்துப் பகுதிகளைப் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றுக்கு இத்தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்திய அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக ‘புநழளுயுசுயுடு’ என்ற திறந்த மூல இயங்குதளத்தில் இயங்கும் இந்தியத் தயாரிப்பு டெஸ்க்டாப் ஜி.ஐ.எஸ் தொழினுட்பமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறைந்த செலவில் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகளாவியதலைமைத்துவத்திற்கானஇந்தியாவின்பாதை
தொழினுட்பச் சாதனங்களை உருவாக்குவதுடன் மட்டும் இந்தியாவின் பங்கு நின்றுவிடக்கூடாது. மிகப்பெரிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் திறன் இந்தியாவிற்கு உள்ளது.
உதாரணமாக, இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் இந்திய சர்வே திணைக்களம் இணைந்து செயற்படுத்தும் சுவாமித்வா திட்டம், ட்ரோன் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்புற நிலங்களை அளவிட்டு கோடிக்கணக்கான சொத்து அட்டைகளை வழங்கியுள்ளது.
ஆதார், யு.பி.ஐ மற்றும் கோவின் போன்ற உலகளவில் புகழ்பெற்ற டிஜிட்டல் திட்டங்களைப் போல, சுவாமித்வா போன்ற நில நிர்வாகத் திட்டங்களின் அனுபவத்தை ஏனைய வளரும் நாடுகளுக்கு வழங்குவதன் மூலமும், தொழில்நுட்பத்தைச் சமுதாயப் பயன்பாட்டிற்குப் பெரிய அளவில் கொண்டு செல்வதன் மூலமும் இந்தியா புவிசார் தொழினுட்பத் துறையில் உலகளாவிய தலைவராக உருவெடுக்க முடியும்.
இத்தகைய தொடர்ச்சியான முதலீடுகள், உள்நாட்டுத் தயாரிப்புப் கலாசாரம் மற்றும் பரவலான புவிசார் கல்வியறிவு ஆகிய நான்கும் ஒன்றிணையும் போது, புவிசார் தொழில்நுட்பப் புரட்சியில் இந்தியா உலகின் முன்னணி சக்தியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.


















