2027 இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடருக்கு முன்னதாக, ஆறு இலங்கை வீரர்கள் தங்களது அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய ஆறு வீரர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம், ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணிக்காக தசுன் ஷானக மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோரும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக நுவன் துஷாரவும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.


















