முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதான விவகாரத்தை தூதுவராலயங்களுக்கு தெரியப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (24) இரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச் சென்று ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை அறியப்படுத்தியுள்ளனர்.
ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரல, அலி சப்ரி உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏனைய தூதரகங்களுக்கும் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு கவலை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















