முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாகவே இவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சி.சி.டிவி காட்சிகளை பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு தள்ளுபடி செய்த நிலையில் இவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















