இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மூடுவதற்கு திட்டம் எதுவும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கூட்டுத்தாபனத்தின் மொத்தக் கடன் தற்போது ரூ. 1.6 பில்லியன் எனவும், அது படிப்படியாகத் தீர்க்கப்பட்டு வருவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குள் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்படும் என நாங்கள் திறைசேரிக்கு உறுதியளித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.


















