இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு,சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 15 ஆவது துணை ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


















