உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு அங்குள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதனால் வீதிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டதுடன், சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன. டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு பாஜக எம்.பி. மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


















